பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 25 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

