அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை – பிறை கண்டதாக சொன்ன ஆதாரங்களில் குழறுபடிகள் இருக்கிறது என மேலோட்டாக கூறியிருக்கிறதே தவிர. குழறுபடிகள் யாவை என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்தவில்லை. இது முற்றிலும் கண்டிக்கத் தக்கது.
திஹாரியில் இரண்டு பெண்கள் பிறை கண்டதாக அறிவித்திருந்தனர். பெண்களில் சாட்சியம் செல்லுபடியாகாது என நிராகரித்திருக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க முட்டாள்தனமான முடிவு.
அடுத்து மன்னாரைச் சேர்ந்த குபா என்ற ஒரு ஜூம்மாப்பள்ளி, அங்கு பிறை கண்டதை உறுதி செய்து அறிவித்திருக்கிறது. அந்தக் கடிதம் இணைங்களில் கூட வெளியிடப்பட்டுள்ளது.
இருந்தும் அவைகளையும் மறுத்திருக்கிறது. இதனுாடாக, மக்களைக் குழப்பும் நடவடிக்கையைச் செய்திருக்கிறது. இது உலமா சபையின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எதுவுமில்லை.
வெறுமனே பிறை கண்டதாகச் சொன்ன ஆதாரங்களில் குழப்பம் உண்டு என உலமா சபை கூறிவிட்டால் அதனுடைய பொறுப்பு முடிந்து விட்டது எனக் கருதவது உண்மையில் பொறுப்பற்ற அடி முட்டாள்தனமான ஒரு விசயம்.
ஆதாரங்கள் எப்படி குழப்பமானது என்றும், எங்கெங்கிருந்து பிறை கண்டதாக தகவல்கள் கிடைத்தன என்றும், அதில் என்ன குழப்பங்கள் இருப்பதால் நிராகரித்தோம் என மக்களுக்குத் தெளிவு படுத்தா நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும்.
அத்தோடு இந்த தான்தோற்றித்தனமாகவும், மக்களைக் குழப்பும் வகையிலும் நடந்துகொள்ளும் உலமா சபையை கலைத்து. அறிவுள்ள, நேர்மையான, பொறுப்புடன் நடந்துகொள்ளக் கூடிய, மக்களுக்கு எதையும் தெளிவுபடுத்தக் கூடிய ஒரு உலமா சபை அமைக்கப்பட வேண்டும்.
