சீனா விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியின் 5வது பிறந்தநாளை ஒட்டி பூங்கா நிர்வாகம் பனிக்கட்டிகளில் மூங்கில் இலைகளை கொண்டு செய்த கேக்-ஐ பரிசளித்தது.
யூனான் மாகாணத்துக்கு உட்பட்ட குன்மிங் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ‘மௌசூ’ என்ற பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் 5வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், பூங்கா நிர்வாகம் அதன் இருப்பிடத்தை பூசணிக்காய் வடிவிலான விளக்குகளை கொண்டு அலங்கரித்திருந்தது. மேலும், பிறந்த நாள் கொண்டாடும் பாண்டாவுக்கு ஆப்பிள் பழங்களும் ருசிபார்க்க வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதற்கு மிகவும் பிடித்த மூங்கில் இலை, குச்சிகள் கொண்டு செய்யப்பட்டிருந்த பனிக்கட்டி கேக்கும் பரிசளிக்கப்பட்டது. பனிக்கட்டி கேக்கில் கலந்திருந்த ஜூஸ் மற்றும் தேன் சுவையை ஆர்வமுடன் ருசிபார்த்த பாண்டாவை, கண்ட சிறுவர் சிறுமியர் அதற்கு பிறந்த நாள் பாடலை பாடினர்.