கொழும்பு-2, பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் பரவிய தீ சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கொழும்பு – பிரேப்ரூக் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் 2.55 அளவில் தீ பரவியது.
8 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக விமானப்படையின் உதவியும் பெறப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீயில் சிக்கி காயமடைந்த இந்தியப் பிரஜையொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

