Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவில் மரணமான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி

February 3, 2019
in News
0

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது இறுதி நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 6.00 மணிக்கு சமய கிரியைகளுடனும் காலை 8.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகளுடனும் நடைபெறவுள்ளதாக கூறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்…

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury – Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், விடுதலைப் புலிகளின் தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற முன்னாள் தளபதி என கூறப்படுகிறது.

இவரின் மரணத்திலும் பலவகை மர்மங்கள் தொடர்வதாக கூறும் முன்னாள் போராளிகளிகளுடன் தடுப்பில் இருந்து வந்தவர் எனவும் வந்த பின்னர் பிரித்தானியாவில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

திடீர் என ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்ற போது சரியான வகையில் முதலுதவி கொடுக்கத் தவறியதன் விளைவே இவரது மரணத்திற்கு காரணம் என கூறும் முன்னாள் போராளிகள் தடுப்பில் இருந்து வந்த பலர் தாயகத்திலும் இறந்துள்ளனர் அதன் நீட்சியாக வெளிநாடுகளிலும் பலர் இறக்கின்றனர் அப்படிப் பார்க்கையில் இலங்கை அரசு தடுப்பில் இருந்த போது ஏதாவது மெல்லக் கொல்லும் மருந்துகளை உடலினுள் ஏற்றி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

காரணம் மிகவும் ஆரோக்கியமான நிலையில் தடுப்பிற்குச் சென்றவர்கள் சென்று வந்த பின் தீடீர் திடீர் என இறப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

 

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியான அதிரடி அறிவிப்பு

Next Post

இலங்கையின் ஒரு பகுதியில் நிலத்தின் கீழ் இருந்து தென்படும் இந்து – இஸ்லாமிய மத ஸ்தளங்கள்

Next Post

இலங்கையின் ஒரு பகுதியில் நிலத்தின் கீழ் இருந்து தென்படும் இந்து - இஸ்லாமிய மத ஸ்தளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures