பிரித்தானியாவில் தீவிரவாதிகள் தொடர்பாக பொலிசார் நடத்திய சிறப்பு அதிரடி சோதனையில் ஒரு பெண் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Willesden பகுதியில் உள்ள Harlesden என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணிக்கு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அதாவது தீவிரவாதிகள் உள்ளார்களா என்பது குறித்து பொலிசார் சிறப்பு சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, திடீரென்று அப்பெண்ணை பொலிசார் சுட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 20 வயது மற்றும் 16 வயதுடைய ஆண்கள் இரண்டு பேர் என்றும் 20 வயது மற்றும் 43 வயதுடைய பெண்கள் இரண்டு பேர் எனவும் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
அந்த நான்கு பேருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
பொலிசார் ஏன் அப்பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் தீவிரவாதியா என்பது குறித்தும் தற்போது வரை எந்த ஒரு தகவல்கள் வெளியாகவில்லை
இச்சம்பவத்திற்கு முன்னர் லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கத்தியுடன் நுழைய முற்பட்டான். அவனை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.
தற்போது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கும், பாராளுமன்ற சம்பவத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.