Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடையில் நடந்த சம்பவத்தினால் குழந்தைகள் பாதிப்பு, தந்தை வேதனை

August 27, 2020
in News, Politics, World
0

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த ஆசிய குடும்பத்தினரை குரங்குகள் என்று கூறப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் முகக்கவசம் என்பது கட்டாமாக்கப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு உள்ளே சென்றாலோ அல்லது கூட்டங்கள் நிறைந்த பொதுவெளியில் சென்றாலோ முகக்கவசம் அணியும் படி அரசு வலியுறுத்துகிறது.

அதே சமயம் மருத்துவ காரணங்களுக்காக சிலர் முக்ககவசம் அணிய முடியாது என்றால் அவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவின் Bradford-ல் வசித்து வரும் ஆசியாவை சேர்ந்த Mohammed Abubakar Qasim என்பவர், ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்தை குரங்குகள் என்று அழைத்ததாகவும், இதனால் தன் குழந்தைகள் வெளியில் செல்ல பயப்படுவதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

மருத்துவர் ரீதியாக முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு பெற்ற இவர் West Yorkshire-ன் Dewsbury-ல் இருக்கும் Charlotte’s Ice Cream Parlour-க்கு தன் குடும்பத்தினருடன் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது முகக்கவசம் காரணமாக, அந்த பார்லரில் இருந்து குடும்பத்தினர் வெளியேறும் படி கூறியதுடன், குடும்பத்தினரை குரங்குகள் என்று அங்கிருந்த தொழிலாளி அழைத்துள்ளார்.

இதனால் கடந்த வியாழக் கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மேற்கு யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்தனர்.

Mohammed Abubakar Qasim பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, இந்த சம்பவம் காரணமாக என் குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரை, முகக்கவசம் இல்லாமல் மக்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவில், முகக்கவசம் இல்லாமல் பார்லருக்குள் நுழைந்தாக குறிப்பிட்டார்.

கடை ஊழியரிடம் மருத்துவ ரீதியாக விலக்கு அளிக்கப்பட்டதாக நிரூபிக்கும் பாஸைக் காட்ட முயற்சித்தோம். ஆனால்,அவர்கள் எங்கள் குடும்பத்தினரையும் வெளியேறச் சொன்னார்கள்.

ஏன் என்று கேட்டபோது, அவர் எங்களை குரங்குகள் என்று அழைத்தார். அப்போது தொழிலாளி ஒருவர் கடையை விட்டு வெளியேறும் படி கத்த ஆரம்பித்தார். இது குழந்தைகளை கண்ணீரில் ஆழ்த்தியது.

ஒரு ஊழியர் இது குறித்து மன்னிப்பு கேட்டதாகவும், இரண்டு சாட்சிகள் காவல்துறைக்கு அறிக்கைகளை வழங்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுத்த உதவும் விழிப்புணர்வுகளை நடத்த விரும்புவதாக Mohammed Abubakar Qasim கூறியுள்ளார். இவருக்கு 11, 7 மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நாங்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறோம், பாதிக்கப்பட்டவரிடமிருந்து முழு அறிக்கையையும் பெற்றுள்ளோம். இனரீதியான துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை நாங்கள் எவ்வளவு தீவிரமாக நடத்துகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

தொழுகையில் இருந்த 51 பேரை கொன்றவருக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை

Next Post

சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று

Next Post

சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures