பிரித்தானியாவில் strep A பாதிப்பு தற்போது பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் இந்த strep A பாதிப்பு காரணமாக இதுவரையில் 19 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இருந்து strep A பாதிப்புக்கு பலியான சிறுவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
பலியான சிறுவர்களின் எண்ணிக்கை
பிரித்தானியாவின் UKHSA அமைப்பு பலியான சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகலாம் எனவும் சுகாதாரத்துறை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் தொண்டை அழற்சியால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஆன்டிபயாடிக் மூலம் எளிதாக சிகிச்சையளிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொண்டை வலி, எச்சில் முழுங்குவதில் சிரமம், தலைவலி, காய்ச்சல் என அறிகுறிகள் காணப்பட்டால், கட்டாயம் மருத்துவர்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்து
சுகாதார நிபுணர்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில், strep A பாதிப்பானது மிக சாதாரணமான அறிகுறிகளுடன் காணப்படுவதால் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்துவதில்லை.
பிரித்தானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறுவர்களின் மரணம் | Death Toll May Rise Rising Infection In Britain
மேலும், அதன் தாக்கம் தீவிரமடைந்த பின்னர் மருத்துவர்களை நாடும் நிலையே காணப்படுகின்றது.
strep A பாதிப்பானது தற்போது அதிகரிப்பதன் காரணம் கண்டறியப்படவில்லை. மக்கள் நடமாட்டம் தற்போது அதிகமிருப்பதால், தொற்று பரவும் வாய்ப்பும் அதிகம்.”என தெரிவித்துள்ளனர்.