இவ்வாண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி பிரிட்டிஷ் கப்பல் ஒன்றைச் சிறைபிடித்த ஈரான், அதனை விரைவில் விடுவிக்கக்கூடும் என்று அதன் உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற அக்கப்பல் ‘ஸ்டெனா பல்க்’ என்ற சுவீடன் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
இந்நிலையில், “இன்னும் சில மணி நேரத்தில் ஈரான் அந்தக் கப்பலை விடுவிக்கக் கூடும் என இன்று (நேற்று) காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன்மூலம் கப்பலை விடுவிப்பது தொடர்பில் அரசியல் தீர்வு எட்டப்பட்டு இருக்கலாம் என நாங்கள் அறிகிறோம்,” என்று ‘ஸ்டெனா பல்க்’ தலைமை நிர்வாகி எரிக் ஹேனல் தெரிவித்தார்.
ஜிப்ரால்டர் பகுதியில் தனது கப்பல் ஒன்றை பிரிட்டன் சிறைபிடித்ததற்குப் பதிலடி தரும் வகையில் ஈரானும் அந்த பிரிட்டிஷ் கப்பலைச் சிறைபிடித்தது.

