கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடையும் என்பதை புலியொன்று முன்னறிவிப்புச் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் என்றாலேயே அது ஆருடங்களால் நிறைந்திருக்கும் என்பது பொதுவானது. விலங்குகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்று கணிப்பது மிகப்பெரும் பொழுதுபோக்கு. அவ்வாறு புலியொன்றை வைத்து மேற்கொண்ட கணிப்பில் அந்தப் புலி குரோசியாதான் வெல்லும் என்றதாம்.
இங்கிலாந்தின் கொடியையும், குரோசியாவின் கொடியையும் பொதிகளில் வரைந்து அதை புதியொன்றின் முன்னால் தொங்கவிட்டிருக்கிறார்கள். புலி குரோசியாவின் பக்கமாகப் பாய்ந்ததாம். இங்கிலாந்துக்கு எதிராக குரோசிய வீரர்கள் பாய்ந்ததைப்போல.

