பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, மைலைப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.