இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டூட் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊரும் பிளட் ‘எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூட் ‘எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜு, சரத்குமார், ஹிர்து ஹாரூன், ரோகிணி , ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இளமை ததும்பும் ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி – வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தீபாவளி திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அலையே அலையே காட்டுல மழையே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியரும், சுயாதீன இசைக்கலைஞருமான பால் டப்பா எழுத இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான சாய் அபயங்கருடன் இணைந்து பால் டப்பா, தீப்தி சுரேஷ், பூமி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
கொண்டாட்டத்தை முன்னிறுத்தும் இந்தப் பாடலின் ஒலி அமைப்பு வித்தியாசமாக இருப்பதால் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.