நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதமரிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க இடமளிக்கவில்லை என விஜித ஹேரத், சபாநாயகரிடம் கேட்டார். அத்துடன் நேற்று பிரதமர் நாடாளுமன்றத்தில் இருந்தார் எனவும் இன்று அவர் ராஜினாமா செய்துள்ளாரா என்பதை அறிந்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இந்த கேள்விக்கு பதிலளிக்கும் தரத்திற்கு நாடாளுமன்றம் தரம் தாழ்ந்து போக தேவையில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து சபை முதல்வருக்கும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சபையை அமைதிப்படுத்த சபாநாயகர் முயற்சித்தார். எனினும் வாக்குவாதம் தொடர்ந்தால், சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]