பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அவர், 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் உயர்மட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும் என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். புதுடெல்லி தவிர்ந்து வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பது உள்ளிட் விடயங்கள் குறித்து பேசப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

