மக்களவையில் பிரதமரை ராகுல் கட்டித்தழுவி வாழ்த்து பெற்றதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களவையில் தமது நண்பரைப் பார்த்து ராகுல் கண்ணடித்ததையும் சபாநாயகர் கண்டித்துள்ளார். அவையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினரின் கடமை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், ராகுல் எனக்கு மகன் போன்றவர் என்று தெரிவித்தார். மேலும் மகன் தவறு செய்தார் அவற்றை திருத்த வேண்டியது தாயின் கடமை என்று கூறினார்.

