அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தின் மூலம் பிரதமரை நீக்குவதற்கு முடியும் எனவும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் பிரதமருக்கு குறிப்பிடத்தக்களவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹ தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுய விருப்பின் படி இராஜினாமா செய்வதாயின் அது ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதுவல்லாமல் ஜனாதிபதிக்கு பிரதரை நீக்கும் அதிகாரம் கிடையாது.
அதுவல்லாது, பாராளுமன்றத்தில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லாதிருப்பதை தெரியப்படுத்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து பிரதமரை இராஜினாமா செய்யத் துண்டும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் மேனக ஹரன்கஹ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.