ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புகள் மாற்றம் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம் அல்லது வாக்களிப்பில் இருந்து விலகியிருப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
தாம் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை எனவும் உறுதியான ஐக்கிய தேசியக் கட்சியொன்றை கொண்டுவருவதே தனது நோக்கம் எனவும் பாலித்த ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.