2022 ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இதற்காக ஜனவரி 2 ஆம் திகதி டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் திட்டமிட்டிருந்தார்.
எனினும் இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் தனது டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ உறுதிபடுத்தியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]