ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களுக்கு பிரதமருக்கு வேண்டப்பட்ட ரோயல் தரத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியில் மாற்றம் வேண்டிய உறுப்பினர்களுக்கு தங்களது மேனியில் பட்டாசுகளைக் கொழுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நேற்று கூட்டு எதிர்க் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு நஞ்சு அருந்துவதற்கே ஏற்பட்டுள்ளது. மே மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பிக்கும் போது இதன் விளைவுகளை சபையில் கண்டுகொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.