Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கவும் – இம்ரான் எம்.பி

April 27, 2018
in News, Politics, World
0

சன்முஹா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

திருகோணமலை சன்முஹா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சட்டம் ஒழுங்கு’ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த இம்ரான் எம்.பி,

இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரச்சினையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம்ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது.

அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது.

ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன. முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சாரஆடை அணிந்து வர மறுக்கப்பட்டுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சார பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாடட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இதே போன்ற ஒரு பிரச்சினையை ஸ்ரீ ஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்த’ மதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது என தெரிவித்தார்.

Previous Post

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய ஜனாதிபதி

Next Post

பெரும்பான்மை இளையதலைமுறையினர் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இல்லை

Next Post

பெரும்பான்மை இளையதலைமுறையினர் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures