வையாபுரி எப்ப பார்த்தாலும் கணேஷ் சாப்பிடுவதை பற்றி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை! விருந்தோம்பல் மறந்ததேன் வையாபுரி? என்று நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் கணேஷ் வெங்கட்ராம் அதிகமாக சாப்பிடுவது வையாபுரிக்கு தான் பிரச்சனையாக உள்ளது. அவர் தான் அதை பற்றி அடிக்கடி பேசுகிறார். இந்நிலையில் இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கணேஷின் உணவு பழக்கம் பற்றி வையாபுரியை தவிர வேறு யாரும் புகார் கூறுவது இல்லை. கணேஷை விட வையாபுரி தான் உணவை பற்றி அதிகம் யோசிக்கிறார்.
வையாபுரி எப்ப பார்த்தாலும் கணேஷ் சாப்பிடுவதை பற்றி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை! விருந்தோம்பல் மறந்ததேன் வையாபுரி?
சாப்பிடுற விஷயத்துல இப்படி சொல்றது எனக்கு பிடிக்கல… வையாபுரி மோசம் என்று ஒருவர் ஸ்ரீப்ரியாவிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
வேறு ஒன்றும் இல்லை, தன்னால் சாப்பிட முடியவில்லை என்று வயிறு எரிச்சல் என்று மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான், முடியாதவன் கோவபட்ரான்