பிக்குகள் தொடர்புபடும், விகாரைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்யும் போது, தற்பொழுது நடைமுறையிலுள்ள ஒழுங்குகளை விடவும் வித்தியாசமான ஒழுங்கு முறையொன்று பின்பற்றப்பட வேண்டும் என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
விகாராதிபதிகளிடம் பிக்குகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் வழக்குகளை பொது மக்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்வது பொருத்தமற்ற ஒன்று என்பது எனது அபிப்பிராயமாகும் எனவும் மகாநாயக்க தேரர் கூறியுள்ளார்.
வழக்குடன் தொடர்புடையவர்கள் மாத்திரம் சமூகமளித்திருப்பது பிரச்சினைக்குரியதல்ல எனவும் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பிக்குகள் தொடர்பிலான வழக்குகளை காலை வேளையில் நடாத்துவதனால், பகல் நேர வழிபாடுகளில் பிக்குகள் கலந்துகொள்ள இடைஞ்சல் ஏற்படுவதாகவும், பிக்குகள் தொடர்பிலான வழக்குகளை மாலை நேரத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் மகாநாயக்க தேரர் நீதி அமைச்சர் தலதா அதுகோரலவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.