இந்நாட்டில் இடம்பெறும் குறைந்த வயது திருமணத்தைத் தடுப்பது தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக் கக் கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியேற்ற பின்னர் அஸ்கிரிய மற்றும் மல் வத்து பீடத்தின் மாநாயக்க தேரர்களை சந்திக்க விகாரை களுக்கு சென்றபோது ஆசி பெற்றக்கொண்டதன் பின்னர் நீதி அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பெண்கள் சங்கங்களாக வந்து இது தொடர்பாக தன்னுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
நான் திருணம் தொடர்பான விடயத்தை முன்னெடுத்துச் செல்லும் போது பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும், இருப்பினும் நாட்டை ஒரு சவாலான முறையில் கட்டி எழுப்புவதற்காக எனது பூரண பங்களிப் பை வழங்குவேன் என அவர் தெரிவித்தார்.
சகல இலங்கையர்களுக்கும் சேவை செய்வதற்காக என் னை நீதி அமைச்சராக நியமித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நான் இஸ்லாத் மதத்தை சார்ந்தவன் இருப்பினும் நான் சிறுவனாக இருந்தபோது சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டேன் அத்தோடு பௌத்த கலாச்சார ரீதி யாக வளர்க்கப்பட்டுள்ளேன்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மாநாயக்க தேரர் களை சந்தித்து இதனை அவர் தெரிவித்தார்