பால்மா விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
பால்மா விலையை மீண்டும் அதிகரிக்குமாறு பால்மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் பால்மா நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை கூறியுள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் பால்மா விலையை 70 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.