பிரான்சில் -பாலியல் வழக்கொன்றில் பொதுமக்கள் நிதியத் தணிக்கை அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin சிக்கி உள்ளார். 2017 மார்ச் மாதம் இவர் மீது தொடர்ப்பட்ட பாலியல் வழக்கொன்று முடிவொன்றும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளதாக சனிக்கிழமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இவரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு பெணகள்; நல அமைப்புக்கள் முறைப்பாடு வழங்கி உள்ளன.
பிரதமரிற்கு வழங்கியுள்ள இந்த முறைப்பாட்டுக் கடிதத்தில், “பாலியல் வன்புணர்வுக் குற்றத்திற்கு உள்ளானவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்க முடியாது, எனவே இவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்குங்கள்” என பெண்ணியப் போராளிகள் சார்பில் Madeline Da Silva, Elliot Lepers, Clara Gonzales, Marie Cervetti ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
“Richard Ferrand, François Bayrou, Marielle de Sarnez, Sylvie Goulard ஆகியோரும் ஊழல் வழககில் சிக்கியிருப்பதால் அரசிலிருந்தும், அரச அமைப்புக்களில் (modem) இருந்தும் நீககப்படல் வேண்டும். இருப்பினும் முதலில் பாலியல் குற்ற வழக்கு முக்கியமானது. அரசாங்கம் இறுதிவரை இந்த வழக்கை நடாத்தித் தன் பொறுப்பை உறுதி செய்யவேண்டும்’ எனவும் இந்த முறைப்பாட்டில் பிரதமரிற்கு எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.