பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டுவிட்டரில் ‘#MeToo’ என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகர், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.