Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லை சரத் அதிரடி

October 7, 2020
in News, Politics, World
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு பிஸ்கட் கொடுத்து இராணுவம் சுட்டுக் கொன்றது என குற்றம்சாட்டினார்.

இவ்விடயத்தை மறுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, “பிரபாகரனின் மனைவி விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அவரது மூத்த மகன் விடுதலைப் புலிகளின் கேணல் தர அதிகாரி. அவரது மகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் உறுப்பினராக இருந்தார். அவரது இளைய மகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தை படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

2009 இல் ஊடகங்களில் பரப்பப்பட்ட படத்தில் பிரபாகரனின் இளைய மகன் சாரம் அணிந்தபடி காணப்பட்டார். அவருக்கு அருகில் சீருடையுடன் சிலர் இருந்தார்கள்.

அந்த சீருடையைக் கவனித்தால், இந்திய படையின் காட்டு நடவடிக்கை படையணியின் உடையை போலிருப்பது தெரியும். செல்வராசா கஜேந்திரன் தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா

Next Post

கொழும்பில் இன்னமும் யாரும் அடையாளம் காணப்படவில்லை

Next Post

கொழும்பில் இன்னமும் யாரும் அடையாளம் காணப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures