தூர்தர்ஷன் நியூஸ் சேனலுக்கு நடிகர் ரஜினி அளித்த பேட்டி: கோல்டன் ஐகான்விருது அறிவிக்கப் பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்றவர்களை போல நானும் வாழ்கிறேன். பாலசந்தரை சந்தித்தது திருப்பு முனையாக இருந்தது. அவர் தான் எனது வாழ்க்கையை மாற்றினார். நான் கதாநாயகனாக வருவேன் என நினைத்ததுஇல்லை. பாலசந்தர் தான் என்னை தமிழ் படிக்குமாறு கூறினார். எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்டினார்.
பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளேன். சிவாஜிராவாக உணர்கிறேன். வாழ்க்கையில் அனைத்தும் நடிப்பு தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும். எனது துறையை, நடிப்பை மிகவும் ரசிக்கிறேன். ராகவேந்திரர் மீது நம்பிக்கை உள்ளது. இமயமலை செல்வதால், எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.இளம் நடிகர்கள், தங்களது பணியை எந்த பணியாக இருந்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

