ஆஸ்திரேலியாவில் பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
டைமண்ட் வளைகுடா என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் 200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது காற்று பலமாக வீசியதால் நிலைதடுமாறிய அவர், கால் இடறி கீழே விழுந்தார். பாறைகளில் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் விழுந்த அதே இடத்தில் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்தது போலீசாரை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

