இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரவின் நிழல்’ எனும் திரைப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் இரா பார்த்திபன்.
உலகத்தில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என்ற புதிய உத்தியில் ‘இரவின் நிழல்’ என பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் வரலட்சுமி சரத்குமார், அனந்தகிருஷ்ணன், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
உலகின் முதன் முதலாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் முன்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் குரலில் “மாயவா..தூயவா.’ எனத் தொடங்கும் பாடல் வெளியானது.
‘இரவின் நிழல்’ டீஸரில் இயக்குநர் பார்த்திபனின் திறமையும், நேர்த்தியான இயக்கமும் வெளிப்பட்டிருப்பதாகவும், அவரின் புதிய முயற்சி வரவேற்கத்தக்கதாக இருப்பதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]