Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி விசாரணை: நீதிபதிகளை அதிகரிக்க கோரிக்கை

November 14, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட குழுவினால் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான கோரிக்கையை தமது தரப்பினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேற்றிரவு (13) மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நேற்றைய தீர்ப்பு மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவினாலேயே வழங்கப்பட்டது. வழக்குடன் சம்பந்தப்பட்ட எந்தவொருவருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க முடியும்.

நாட்டின் முக்கியமான ஒன்றாக நோக்கப்படும் அரசியலமைப்பு தொடர்பில் சட்டநடவடிக்கைகளை தீர்மானிக்கும் போது 9 பேர் அல்லது 11 பேர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் காணப்பட வேண்டும் என்பது அவசியமாகும். இதற்கான கோரிக்கையை நாம் உயர் நீதிமன்றத்திடம் முன்வைக்கவுள்ளோம் எனவும் நிமல் சிறிபால டி சில்வா எம்.பி. மேலும் கூறினார்.

Previous Post

இலங்கையில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை

Next Post

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

Next Post
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures