சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
“நான் கட்சியிலிருந்து இதுவரை நீங்க வில்லை. இருப்பினும், எமக்கு கட்சியில் எந்தவித வரவேற்பும் காணப்படுவதில்லை. அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை நீக்கினர். சிரேஷ்ட உப தலைவர் என்று கூறியதற்கு சிரேஷ்ட என்ற பதத்தை நீக்கினர்”.
இதுபோன்ற அறிவுக்கு எட்டாத செயலில் ஈடுபடுபவர்களுக்கு என்னதான் செய்வது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நான் எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்னர் மேற்சொன்ன அத்தனையும் நடாந்தன. எதிர்க் கட்சிக்கு செல்ல அதுதான் காரணமாகியது. இதுபோன்ற அறிவுக்கு எட்டாத தீர்மானங்களினால் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் போகலாம்”.
இதனால், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான ஒரு கட்சியைத் தெரிவு செய்து போட்டியிடவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனியார் வானொலியொன்றில் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஏ.எச்.எம். பௌஸி இதனைக் கூறினார்.

