ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விவாதமொன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதத்துக்கான பிரேரணையை கூட்டு எதிர்க் கட்சி முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்ஜித் சொய்ஷா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இவ்விவாதம் நடைபெறவுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாகவும், இந்த வகையில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி முன்வைத்துள்ள பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளது.

