உலகளவில் பாதுகாப்புக்கு, அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.
உலகில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏவுகணைகள், பீரங்கிகள், போர் விமானம், அணு ஆயுதம், விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கி கப்பல், வீரர்கள் என பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பாதுகாப்புத் துறைக்கு கணிசமான நிதியை ஆண்டுதோறும் ஒதுக்குகிறது.
உலகளவில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, 2017ல் ரூ.115 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டை விட 1.1 சதவீதம் அதிகம்.
‘டாப்-11’ நாடுகள்:
2018ல் அமெரிக்கா, பாதுகாப்புத்துறைக்கு ரூ.4,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதலிடத்தில் உள்ளது. இது உலகளவில் 35 சதவீதம். இந்தியா 5வது இடத்தில் உள்ளது.