Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

August 8, 2018
in News, Politics, World
0
பாதாள உலகக் குழுவினருடனான மோதலில் 15 பேர் பலி

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பாதாள உலகக் குழுவினருடனான மோதல்களில் 15 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அனைவரும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களென பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் 52 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Previous Post

ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Next Post

கருணாநிதியின் தவறுகள் மற்றும் சாதனைகளில் இருந்து பாடம் கற்கிறேன்!: கமல்

Next Post
கருணாநிதியின் தவறுகள் மற்றும் சாதனைகளில் இருந்து பாடம் கற்கிறேன்!: கமல்

கருணாநிதியின் தவறுகள் மற்றும் சாதனைகளில் இருந்து பாடம் கற்கிறேன்!: கமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures