Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! 

December 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இரு வேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸார் விசாரணை

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Attempt Kidnap School Students Police

இதனை அடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையில்  சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில் மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த 27 வயதுடையவராவார்.

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Attempt Kidnap School Students Police

இச்சம்பவமானது தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் மாணவர்கள் சிலரை இலக்கு வைத்து இவ்வாறான கடத்த முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யட்டிருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸாரும் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.

இதற்கமைய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேகநபர் கைது செய்யப்படடதுடன் நேற்று (29)  கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.

இவ் அடையாள அணிவகுப்பின் போது சந்தேகநபரை பாதிக்கப்பட்ட மாணவன் அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மகத்தான பணி

Next Post

யூ டியூப் பார்த்து துப்பாக்கியை தயாரித்த இளைஞன்

Next Post
யூ டியூப் பார்த்து துப்பாக்கியை தயாரித்த இளைஞன்

யூ டியூப் பார்த்து துப்பாக்கியை தயாரித்த இளைஞன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures