மாணவ, மாணவிகளின் பாடசாலை அனுபவங்களை மையப்படுத்தி ‘பாபா பிளாக் ஷீப்’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
தொலைக்காட்சி தொகுப்பாளரும், மேடை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இந்த திரைப்படத்தில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஆர். ஜே. விக்னேஷ் காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிளாக் ஷீப் எனும் யூட்யூப் சேனல் குழுவினரும் நடிக்கிறார்கள்.
சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். பாடசாலையில் பயின்ற மாணவ மாணவிகளின் நினைவுகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இதன் படபிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ”பாபா பிளாக் ஷீக் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும்” என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.