பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் ஹொரணை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹொரணை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 220 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

