மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் திருத்த பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21 ஆம் திகதி 3 ஆம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லீம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி 3 ஆம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.