பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் அதிகாரிகளுக்காக சைபர் பாதுகாப்பு கையேடு ஒன்றை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
‘இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் சைபர் பாதுகாப்பு’ தொடர்பான பணிக்குழுவுடனான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (6) அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு, இணைய பாதுகாப்பு , டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கையேடு ஒன்றை தயாரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப், தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



