பயங்கரவாத அமைப்புகள், இணையதளம் மற்றும் சமூகவலை தளங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், 937 இணைய பக்கங்கள், 10 இணைய
தளங்களை, அண்டை நாடான பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில், 2014ல், பெஷாவர் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தேசிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது.இதன்படி, பாகிஸ்தானால் தடை செய்யப்பட்ட, 64 பயங்கரவாத அமைப்புகளில், 41 அமைப்புகள், இணைய தளங்கள், சமூகவலை தளங்கள் மூலம், பல்வேறு நபர்கள், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகள் பயன்படுத்திய, 937 இணைய பக்கங்கள், 10 இணையதளங்கள் முடக்கப்பட்டுஉள்ளன.
மூன்று ஆண்டுகளில், 1,351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை விற்ற, 70க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.