பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும், 18 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களிடையே உயர் பொலிஸ் அதிகாரியொருவரும் இருப்பதாக தகவல்கள் குறிப்பிட்டள்ளன.
இந்த தாக்குதல் தற்கொலைக் குண்டுத் தாக்குதலா? அல்லது தொலைவில் இருந்து இயக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்ட ஒன்றா? என்பதில் சந்தேகம் உள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நேற்று (10) மாலை அஸர் தொழுகை வேலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பாகிஸ்தானின் குவேட்டா பிரதேசத்தில் ஒரு வாரத்துக்குள் இடம்பெற்ற இரண்டாது தாக்குதல் இது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். குழு பொறுப்பேற்றுள்ளதாக த நிவ்யோர்க் டைம்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

