பாகிஸ்தானில் இரண்டு சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில் உள்ள சுரங்கத்தில் வாயு கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். இந்த சம்பவத்தில், 16 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குயிட்டாவில் உள்ள மற்றொரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.