பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
தி நியூஸ் இன்டர்நேஷனல் தகவலின் படி , மிர்புர்காஸ் மாவட்டத்தின் நௌகோட் நகருக்கு அருகே டாங்கிரி சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களால் குறித்த இரு பெண்களும் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், 20 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட இரு பெண்களையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் மிர் தாரிக் தல்பூர் அவசர உத்தரவிற்கு அமைய பொலிசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில், பொலிஸ் துறை, சட்டம் மற்றும் நீதி ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பாகிஸ்தானில், கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]