முகக் கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பயணிகள், பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் , பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கு பேருந்துப் பயணிகள் பயணிக்க வேண்டாம் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறியுள்ளார்.

