வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆராய தேசிய தேர்தல் ஆணையகம் இன்று கூடும்.
இதன்போது ஒருமித்த முடிவு எட்டப்பட்டால், பசில் ராஜபக்ஷவின் பெயர் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா 2021 ஜூலை 06 ஆம் திகதி முதல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக தனது கையொப்பத்தின் கீழ் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடம் இருப்பதாக 1988 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க தேர்தல்கள் சட்டத்தின் கீழ் அறிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.