Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

November 15, 2018
in News, Politics, World
0

பழ.நெடுமாறன் எழுதிய தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகத்தை முற்றிலுமாக அழிக்குமாறு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியிட்டார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டார். இதில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், பழ.நெடுமாறனிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு இந்த வழக்கில் இருந்து, 2006ம் வருடம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தான் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தர வேண்டும் என்று கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த புத்தகங்களை திரும்ப வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், பழ நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ள புத்தகங்களை திரும்ப வழங்க இயலாது என்றும், அந்த புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Previous Post

டிரம்ப் மீது சி.என்.என். வழக்கு

Next Post

நவ., 23-ல் செய் ரிலீஸ்

Next Post
நவ., 23-ல் செய் ரிலீஸ்

நவ., 23-ல் செய் ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures