மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணங்கியிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதுவிடயத்தில் சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம், தினேஷ் குணவர்த்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
தாம் தேர்தலை நடத்த அஞ்சவில்லையென்றும், தமக்கும் தேர்தலை நடத்தவேண்டிய தேவை இருப்பதாகவும் சபை முதல்வர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை பழைய முறையான விகிதாசார முறையில் நடத்துவதற்கு இணங்கியிருப்பதாகவும், பழைய முறையில் தேர்தலை நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.