முல்லைத்தீவு குமுழமுனையிலுள்ள பொது குழாய்க்கிணறு ஒன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிரதேசசபை உறுப்பினர் இ.கவாஸ்கரினால் திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
குமுழமுனை சந்தைக்கு அருகாமையிலுள்ள பொது குழாய்க்கிணறு ஒன்று நீண்டகாலமாக பழுதடைந்த நிலையிலிருந்துள்ளது. இதையடுத்து கரைதுறைப்பற்று குமுழமுனை பிரதேச சபை உறுப்பினர் இரத்தினசிங்கம் கவாஸ்கர் கவனத்திற்கு இவ்விடயம் அப்பகுதி மக்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் அக்குழாய்க்கிணறு பிரதேச சபை உறுப்பினரின் நேரடித்தலையீட்டில் திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.