தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தக்க 150 படங்களுக்கும் மேல் இயக்கிய நாராயண ராவ் இன்று உடல்நல குறைவு காரணமாக திடீர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 75. இது தெலுங்கு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு முறை தேசிய விருது, 9 நந்தி விருது, 4 பிலிம்பேர் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். சினிமா மட்டுமின்றி அரசியலில் சந்தித்துள்ள இவர் இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். 9 நந்தி விருதுகளும், 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
நுரையீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாகி அவதிப்பட்டு வந்த தாசரி நாராயண ராவுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அவர் சென்ற வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.